புனித நீராடுவதற்கு வந்துள்ளோம்: தங்க தமிழ்செல்வன் விளக்கம்

  Newstm Desk   | Last Modified : 23 Oct, 2018 10:30 am
came-to-take-holy-bath-thangatamilselvan

தகுதிநீக்க வழக்கில் சாதகமான தீர்ப்பு வரவேண்டும் என்பதற்காக தாமிரபரணி புஷ்கர நிகழ்வில் புனித நீராட வந்திருப்பதாக அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியை சேர்ந்த டி.டி.வி. ஆதரவு எம்.எல்.ஏ தங்க.தமிழ்ச்செல்வன்  விளக்கம் அளித்துள்ளார். 

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் குற்றாலம் வந்து சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர். 18 பேரில் சிலர் வெளிநாடு செல்ல முடிவு செய்திருந்து தெரியவந்ததால், தீர்ப்பு வரும் வரை தமிழ்நாட்டில் இருக்கும்படி டி.டி.வி தினகரன் கூறியிருக்கிறார். அதன்படி அவர்கள் குற்றாலத்தில் தங்கியிருக்கின்றனர்.

தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரவேண்டும் என்பதற்காக பாபநாசம் சென்று தாமிரபரணி புஷ்கர நிகழ்வில் புனித நீராட உள்ளதாக தங்க தமிழ்ச்செல்வன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இன்றும் நாளையும் குற்றாலத்தில் தங்கி ஓய்வு எடுக்கப்போவதாகவும் அவர் கூறியிருக்கிறார். 

மேலும் அவரிடம் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்புடைய ஆடியோ வெளியானதில் அ.ம.மு.கவுக்கு தொடர்பு இருப்பதாக ஜெயக்குமார் கூறியிருப்பது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, அந்த ஆடியோவுக்கும் அ.ம.மு.கவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close