அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை: 17 பேருக்கும் குண்டர் சட்டம் உறுதி!

  Newstm Desk   | Last Modified : 23 Oct, 2018 01:19 pm

ayanavaram-11-year-old-child-rape-case-update

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் குண்டர் சட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான 11 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குடியிருப்பு காவலர்கள் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் நீதிமன்றக்காவலில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, அவர்களிடம் இருந்து வாக்குமூலமும் பெறப்பட்டது.

தொடர்ந்து, சென்னை பெருநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆணையின்படி, குற்றம் சாட்டப்பட்ட 17 பேர் மீதும் குண்டர் சட்டம் போடப்பட்டது. இதைத்தொடர்ந்து விசாரணை முடிவடைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 12ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கமாக குண்டர் சட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், அறிவுரைக்கழகத்தின் முன் நிறுத்தப்படுவர். அவர்கள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை அறிவுரைக்கழகம் உறுதி செய்யும். 

இதையடுத்து, இன்று அவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அறிவுரைக்கழகம் 17 பேர் மீதான குண்டர் சட்டத்தை அறிவுரைக்கழகம் உறுதி செய்துள்ளது. தொடர்ந்து விரைவில் இந்த வழக்கு முடிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close