அண்ணாமலை பல்கலை துணை வேந்தர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு

  ஐஸ்வர்யா   | Last Modified : 23 Oct, 2018 04:26 pm
case-filed-on-annamalai-university-vice-chancellor

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. 

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக துணை வேந்தர் ராமநாதன் மற்றும் பதிவாளர் சிவசண்முகநாதன் ஆகியோர் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டு 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்துள்ளதாகக் கூறி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த 2009 - 2013 ஆம் ஆண்டு வரை பணியாளர் ஓய்வூதிய நிதிகளில் முறைகேடு செய்தது, பல்கலைகழக மானியக்குழு விதிகளை மீறி பல ஆசிரியர்களை நியமித்தது, மாநில அரசின் நிதிகளில் மோசடி செய்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் கீழ், 50 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை முறைகேடு செய்துள்ளதாகக் கூறி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரிடமும் விசாரணையை தீவிரப்படுத்தும் வகையில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close