தீபாவளி காலையிலே... பட்டாசு இரவு 8 மணிக்கா?- ஹெச். ராஜா ஆவேசம் 

  ஐஸ்வர்யா   | Last Modified : 23 Oct, 2018 05:40 pm
h-raja-angry

அதிகாலையில் இருந்தே தீபாவளி பண்டிகை தொடங்கும் போது, பட்டாசு இரவு 8 மணிக்கு வெடிக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். 

ராஜபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா, “சபரிமலை விவகாரத்தில் கடந்த 7 நாட்களாக இந்து பாரம்பரியத்தை சிதைக்கும் விரோத சக்திகள் உடன் இணைந்து பிரணாயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு செயல்பட்டு வந்தது. சபரிமலைக்கு சென்ற ரெஹனா பாத்திமா இந்துவாக மதம் மாறியவர் என சமூக வலைத்தளங்களில் வரும் தகவல்கள் பொய்யானது. அவ்வாறு இருந்தால் அவரை ஏன் இஸ்லாமிய மதத்தில் இருந்து நீக்க வேண்டும்.

தீபாவளி பட்டாசு வெடிக்க நீதிமன்றம் விதித்துள்ள கால அவகாசத்தை நீட்டிக்க மறு சீராய்வு செய்ய வேண்டும். அதிகாலையில் இருந்தே பண்டிகை தொடங்கும் போது, பட்டாசு இரவு 8 மணிக்கு வெடிக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. போகிற போக்கை பார்த்தால் தீபாவளி கொண்டாட உடை கட்டுப்பாடு வந்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில் மத்திய அரசு மூலம் பயனடைந்த 22 கோடி வீடுகளில் உள்ள பயனாளர்களை நேரில் சந்தித்து, சாதனைகளை கூறி தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளோம். தமிழகத்தில் பாஜக துணை இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது” எனக் கூறினார்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close