தி.மு.கவின் ரிங் மாஸ்டர் அமித்ஷா: தம்பிதுரை பேட்டி

  Newstm Desk   | Last Modified : 24 Oct, 2018 11:21 am
amit-shah-is-dmk-s-ring-master-thambidurai

பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா தான் தி.மு.கவின் ரிங் மாஸ்டர் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிமுறை தெரிவித்துள்ளார்.

கரூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், "தகுதிநீக்க எம்.எல்.ஏக்கள் பற்றிய தீர்ப்பு எப்படி வந்தாலும் அ.தி.மு.க ஆட்சிக்கு பாதிப்பு ஏற்படாது. திமுகவுக்கு அமித்ஷாதான் ரிங் மாஸ்டர், இதை என்னால் ஆதாரத்தோடு நிரூபிக்க முடியும்.

தமிழகத்தை தேசிய கட்சிகள் வஞ்சிக்கின்றன, தமிழகத்தில் தேசிய கட்சிகள் எடுபடாது. காங்கிரஸ், பா.ஜ.க போன்ற தேசிய கட்சிகளுக்கு தமிழக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். அ.தி.மு.கவை பழிவாங்க சி.பி.ஐக்கு மத்திய அரசு மூலம்  தி.மு.க அழுத்தம் அளித்து வருகிறது. 

சி.பி.ஐயின் தரம் தாழ்ந்து வருகிறது, காங்கிரஸ் ஆட்சியின்போது காங்கிரஸ் பீரோ இன்வஸ்டிகேஷன் என்றார்கள். தற்போது சென்டர் ஃபார் பா.ஜ.க இன்வஸ்டிகேஷன் என ஆகியுள்ளது. 2ஜி வழக்கில் தி.மு.கவுக்கு ஆதரவாக சி.பி.ஐ இருந்தது" என்று தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close