மன்னிப்பு கோரி, பிரிட்டிஷ் தூதரகம் நோக்கிப் பேரணி: புதிய தமிழகம் கிருஷ்ணசாமி அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 24 Oct, 2018 04:20 pm
march-towards-british-embassy-dr-krishnasamy

தேவேந்திர குல வேளாள  ஜாதியைச் சேர்ந்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்ததற்கு மன்னிப்பு கேட்குமாறு கோரி வரும் நவம்பர் 15ம் தேதி பிரிட்டிஷ் தூதரகம் நோக்கி பேரணி நடத்த உள்ளதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். 

பட்டியல் இனத்தவர் பட்டியலில் இருந்து தேவேந்திரகுல  வேளாளர் ஜாதியை நீக்க வேண்டும் என அந்த மக்கள் சார்பாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி நீண்ட காலமாக கோரிக்கை எழுப்பி வருகிறார்.

அதுமட்டுமின்றி இதுகுறித்து மாநாடுகளும், பேரணிகளையும் அவ்வப்போது நடத்தி வருகிறார். இந்நிலையில் தேவேந்திரகுல வேளாளர்கள் பட்டியல் இனத்தவராக அறியப்படுவதற்கு பிரதான காரணமே நம் தேசத்தை ஆண்டு வந்த பிரிட்டீஷ் ஆட்சியே காரணம் என்று கருத்து தெரிவித்தார்.

எவ்வாறெனில், ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தின்தான் தேவேந்திர குல வேளாளர் ஜாதியை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இணைத்தனர்.  இதன் காரணமாக இந்த சமூகம் அடைந்துள்ள அவமரியாதைகளும், இழப்புகளும் மிக அதிகமானதாக உள்ளது.

ஆண்ட பரம்பரையான தேவேந்திரகுல வம்சத்தினரை, அடிமைப் பரம்பரையாக சித்தரிக்கப்படுவதற்கு ஆங்கிலேயர்களே காரணம்.  எனவே அவர்களது இந்த செயலுக்கு மன்னிப்பு கேட்க கோரியும், அவர்கள் இழைத்த தவறை நிவர்த்தி செய்யும் பொருட்டும் இந்திய அரசுக்கு பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை பரிந்துரைக்கவும் வலியுறுத்தி பிரிட்டீஷ் தூதரகத்தை நோக்கி புதிய தமிழகம் கட்சி சார்பில் அடுத்த மாதம் 15ஆம் தேதி பேரணி நடைபெறும் என டாக்டர். கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close