தொற்றுநோய் தடுக்க நடவடிக்கை: அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

  டேவிட்   | Last Modified : 26 Oct, 2018 08:21 pm
action-is-being-taken-for-fever-minister-c-vijayabaskar

குழந்தைகள் அதிக அளவில் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதனை தடுக்க தமிழக அரசு தொடர்ந்து  நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

சென்னை எழும்பூரில் உள்ள குழுந்தைகள் நல மருத்துவமனையில் உள்ள காய்ச்சல் பிரிவை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாளை சுகாதாரத் துறை சார்பில் 42 சுகாதார மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு கள பணிகள் மேற்கொள்ளப் படவுள்ளதாக தெரிவித்தார். மேலும், 242 பேர் எழும்பூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில்  62 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், காய்ச்சல் காரணமாக பாதிக்கப்படுபவர்கள் மூன்றாம் கட்ட நிலையில் தான் அரசு மருத்துவமனைக்கு வருகிறார்கள். ஆனால் ஆரம்ப நிலையிலேயே அரசு மருத்துவமனைக்கு வந்தால் விரைந்து குணப்படுத்த வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். மேலும், உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரையின்படி, காய்ச்சலுக்கு பரசிட்டமோல் மருந்துகளோ, ஊசியோ எடுத்துக்கொள்ளக் கூடாது எனவும் முறைப்படி மருத்துவரை அணுகி உரிய மருந்துகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் பன்றிக்காய்ச்சலுக்கான தொற்று இல்லை எனவும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கே அத்தகைய அறிகுறிகள் இருப்பதால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர், கொசு உற்பத்தியை குறைப்பதில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும், இதை மீறும் உரிமையாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close