ஜனவரி மாதத்திற்குள் இடைத்தேர்தல்?

  Newstm Desk   | Last Modified : 19 Nov, 2018 03:58 pm
bypolls-will-be-conducted-within-january

வருகிற  ஜனவரி மாதத்திற்குள் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும், அந்த நேரத்தில் தற்போது காலியாகவுள்ள 18 தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தட்ட வாய்ப்புள்ளது என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, தீர்ப்பின் நகல் மற்றும் சபாநாயகர் உத்தரவு உள்ளிட்ட ஆவணங்கள் சட்டசபையில் இருந்து தலைமை தேர்தல் அதிகாரிக்கு செல்லும். அதையடுத்து தலைமை தேர்தல் அதிகாரி, அதனை தலைமை தேர்தல் ஆணையருக்கு அனுப்பி இடைத்தேர்தல் நடத்த பரிந்துரைப்பார். 

இன்று தலைமை தேர்தல் அதிகாரி இதுதொடர்பான ஆவணங்களை தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிவிட்டார். பின்னர் இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில், "அடுத்த ஆண்டு, ஏப்ரல் அல்லது மே மாதம் இந்தியா முழுவதும் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. எனவே இந்த 20 தொகுதிகளுக்கும், லோக்சபா தேர்தலுடன் இடைத் தேர்தலை இணைந்து நடத்த வாய்ப்புள்ளது.

திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு ஜனவரிக்குள் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யவில்லை எனில், இந்த 2 தொகுதிகளுடன் சேர்த்து 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close