எச்சரிக்கை: தமிழகத்தில் 3 நாட்களுக்குத் தொடர்மழை

  Newstm Desk   | Last Modified : 27 Oct, 2018 09:29 am
weather-forecast

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நவம்பர் 1ம் தேதி முதல் மூன்று நாட்கள் தொடர் மழைக்கு வாய்ப்புள்ளது என தனியார் வானிலை ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

பருவமழை தொடர்பாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவலின்படி, தமிழகத்தில், தென்மேற்கு பருவமழை முடிந்து, வடகிழக்கு பருவக்காற்று துவங்கியுள்ளது. இன்னும் நான்கு நாட்களில், இந்த காற்று வலுப்பெற்று, மழையாக மாறும். வரும், 29ல், வங்க கடலின் மத்திய மேற்கு பகுதியில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். 

இது, வட மேற்கில் நகர்ந்து ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில், 30ம் தேதி முதல் கனமழையாக பெய்யும். இந்த மழை, வடகிழக்கு மாநிலங்களில் ஓயும் நிலையில், தமிழகம், புதுச்சேரியை ஒட்டிய கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில், தொடர் மழை பெய்யும். வரும், 31ம் தேதி வரை, தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை இல்லை என தெரிவிக்கப்பட்டது. 

அதேநேரத்தில், நவம்பர் முதல் வாரத்தில் மிதமாகவும், அதன்பின், இயல்பை விட அதிகமாகவும் மழை பெய்யும் என, வானிலை மையத்தின் நீண்ட கால கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தனியார் வானிலை ஆய்வு அமைப்பினர் வெளியிட்ட கணிப்பில், 'வருகிற நவம்பர் 1ம் தேதி அதிகாலை முதல், 3ம் தேதி வரை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார், நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் தொடர் மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close