முதியோர்களின் காலில் விழுந்த ஆட்சியர் ரோகிணி

  ஐஸ்வர்யா   | Last Modified : 27 Oct, 2018 06:12 pm
rohini-speech-in-salem

சேலத்தில் நடைபெற்ற உலக முதியோர் தினம் விழாவில் 103 வயது உடைய முதியோர்களிடன் காலில் விழுந்து மாவட்ட ஆட்சியர் ரோகிணி வணங்கினார். 

சேலத்தில் நடைபெற்ற உலக முதியோர் தினம் விழாவில் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரோகிணி பங்கேற்று சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி நிர்வாகிகள் ராஜேஷ்வரி, ரமேஷ் உள்ளிட்டு பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய ரோகிணி, மாவட்டத்தில் தாத்தா பாட்டி வீட்டுக்கு வாங்க என்னும் திட்டத்தில் எந்த முதியவரும் இனி வீதியில் இருக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் இதுவரை 633 முதியவர்கள் மீட்கப்பட்டு முதியோர் இல்லங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சமூக நலத்துறையின் சார்பில் இதுவரை 72 முதியவர்களை ஆதரவற்றோர் இல்லங்களில் சேர்த்துள்ளனர்” என்றுக்கூடினார். முடிவில் 103 வயது உடைய முதியோர்களிடம் மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து வணங்கினார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close