#Metoo ஆண்கள் மீது ஏன் விமர்சனம் இல்லை: கனிமொழி கேள்வி

  Newstm Desk   | Last Modified : 28 Oct, 2018 04:18 pm
why-no-one-questioning-men-kanimozhi-mp-on-metoo

பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து கூறும் போது ஏன் ஆண்கள் மீது விமர்சனம் வைக்க மறுக்கிறார்கள் என்று தி.மு.க எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார். 

பலர் மீடூ மூலம் தங்களுக்கு நேரும் பாலியல்  குற்றச்சாட்டுகள் குறித்து சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். இதில் வெளியாகும் பெயர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. 

இந்நிலையில் சென்னையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., “மீ டூ விவகாரத்தில் பெண்கள் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. அவர்களைப் போல், பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஆண்கள் மீது ஏன் விமர்சனங்கள் வைக்கப்படவில்லை..? 

தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகளைப் பகிரங்கப்படுத்த பெண்களுக்குத் தேவைப்படும் கால அவகாசத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அனைத்து காலங்களிலும் பெண்கள் மீது தான் விமர்சனங்கள் வைக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close