நவம்பர் 1 முதல் வடகிழக்கு பருவமழை: வானிலை ஆய்வு மையம்

  Newstm Desk   | Last Modified : 29 Oct, 2018 01:34 pm
northeast-mansoon-from-novermber-1-met-department

வரும் நவம்பர் 1ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார்.

அக்டோபரில் தொடங்கி இருக்க வேண்டிய வடகிழக்கு பருவமழை நவம்பர் நெருங்கியும் இன்னும் தொடங்கவில்லை. இந்நிலையில் சென்னை வானிலை மைய இயக்குநர் ஸ்டெல்லா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இந்த சுழற்சி மேற்கு நோக்கி நகரும் போது வடகிழக்கு பருவகாற்று வலுவடையும். 

நவம்பர் 1ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகி உள்ளது. . தித்லி மற்றும் லூபன் புயல்கள் வந்ததன் காரணமாக பருவமழை தாமதம் அடைந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்தோடு காணப்படும்" என்றார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close