சபாஷ் அமைச்சரே சபாஷ்

  பாரதி பித்தன்   | Last Modified : 29 Oct, 2018 03:36 pm
best-wishes-to-miniter-sengottaiyan

அதிமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை தான் சிறப்பாக செயல்படுகிறது. அமைச்சர் செங்கோட்டயன் மற்றும் அந்தத் துறை அதிகாரிகள் அறிவு, ஆற்றல் கொண்டு செயல்படுவதால்தான் அந்த துறைக்கு இத்தனை புகழ்.
பள்ளி திறக்கும் அன்றே தேர்வு தேதி அறிவித்தது, பிளஸ் 1 படிப்பிற்கு அரசு பொதுத்தேர்வு நடத்துவது என்று பள்ளிக்கல்வித்துறை தோன்றிய காலத்தில் இருந்தே அறிவிக்காத திட்டங்கள். அமைச்சர் சுந்திரமாக செயல்பட முடிந்ததால் தான் இப்படி செய்ய முடிந்தது.

அவர் இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மாநிலம் முழுவதும் 25 ஆயிரம் மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஆட்டர் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப் போவதான அந்த அறிவிப்பு பாராட்டுக்குறிய ஒன்று.
ஒரு காலத்தில் டெல்லி செங்கோட்டை முழுவதும் தமிழர்கள் ஆதிக்கத்தில் இருந்தது. சிவில் சர்வீஸ் தேர்வுகளை ஆங்கிலம் அல்லது இந்தியில் எழுதலாம் என்றதும் வடநாட்டு இளைஞர்களுக்கு தாய்மொழியில் தேர்வு எழுத வாய்ப்பு கிடைத்தால் அவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக மாறிவிட்டது. இந்த சூழ்நிலையில் தேர்வு கடினமாகிவிட்டதால் பெற்றோர் பலரும் இதனை கைவிட்டுவிட்டு , இன்ஜினியர்,டாக்டர் என்று தங்கள் இலக்கை மாற்றிக் கொண்டு விட்டனர்.

இந்தியாவில் ஆண்டுக்கு 15 லட்சம் இன்ஜினியர்கள் படித்து விட்டு வேலைக்கு வருகிறார்கள். ஆனாலும் இந்த மோகம் தீர்ந்தபாடில்லை. வேலையில்லாத இன்ஜியரிங் பட்டதாரிகள் சேர்ந்து சங்கம் வைத்து தொழில் வளர்க்கிறார்கள்.

இந்தியர்களின் குறிப்பாக தமிழர்களின் முதல்கனவு டாக்டர் ஆக வேண்டும் என்பது தான். ஏபிசிடி எழுத் தெரியாத குழந்தையை கேட்டால் கூட டாக்டர்கள் தான் தன்லட்சியம் என்கிறது. இதற்காகவே 30 ஆயிரம் கட்டணம் செலுத்தி பிரிகேஜியில் பள்ளிக்கு .சென்று விளையாடிவிட்டு வருகிறது குழந்தை. பிளஸ் 2 கட்டணம் கேட்கவே வேண்டாம். பள்ளி தாளாளர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது ‘‘சார் எங்க ஸ்கூல் பசங்க எல்லாம் மெரிட்டில் டாக்டர் சீட் பெறுவான். இப்போது மேனேஜ்மெண்ட் கோட்டாவில் டாக்டர் சீட் வாங்க நன்கொடை மட்டும் ஒரு கோடி தர வேண்டும். நாங்கள் என்ன அவ்வளவு பீஸ் வாங்கிறோமா‘‘ என்றார். கடந்த 31–03–2014 அன்று படி  இந்தியாவில் 9,36,488 டாக்டர்கள் உள்ளனர். அடுத்த 10 ஆண்டுகளில் 6 லட்சம் டாக்டர்கள் பற்றாக்குறை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதை சமாளிக்க நாடுமுழுவதும் 200 மருத்துவ பல்லைக்கழகங்கள் தொடங்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் யாரும் எட்டிப்பார்க்காத துறையாக பட்டயதணிக்கையாளர்கள்( ஆடிட்டர்கள்) துறை உள்ளது. ஏதோ விரல் விட்டு எண்ணும் மாணவர்தான் இதை தேர்வு செய்கிறார்கள். நாடு முழுவதும் 1–04–2017 அன்று கணக்குபடி 2,69,350 பதிவு பெற்ற ஆடிட்டர்கள் உள்ளனர். சுமார் 3 லட்சம் பேர் பற்றாக்குறை உள்ளது. படிப்பது கஷ்டம், போதிய விழிப்புணர்வு இல்லாதது போன்ற காரணங்களால் இந்த துறையை பலர் தேர்வு செய்வது இல்லை. இதர தொழில்படிப்புகளை விட இதில் ஒரு வசதி, வேலை பாரத்துக் கொண்டே தேர்வு எழுதினால் போதும். பயிற்சியுடன் கூடிய படிப்பு இதன் காரணமாக ஏழை எளியமக்கள் படிப்பதற்கு மட்டும் கஷ்டப்பட்டால் போதும்.
இந்த சூழ்நிலையில் பள்ளிக்கல்வித்துறை ஆண்டிற்கு 25 ஆயிரம் மாணவர்களை தேர்வு செய்து ஆடிட்டர் முதன்மைத் தேர்வுக்காக பயிற்சி அளிக்கப் போவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ஒரே ஆண்டில் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் கூட ஆடிட்டர்கள் உருவாவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

இடை நிலை ஆசிரியர் படிப்பு அறிமுகம் செய்யபட்ட காலத்தில் பிளஸ் 2வில் ஒரு பிரிவாக ஆசிரியர் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் காரணமாக பள்ளி மாறாமலேயே ஆசிரியர் கல்வி கற்க முடிந்ததால் பலர் சேர்ந்தனர். இதே சூழ்நிலை தற்போது ஆடிட்டர் கல்விக்கும் ஏற்பட்டுள்ளது. நிச்சயம் இன்னும் சில ஆண்டுகளில் இதுநல்ல பலன் கொடுக்கும். கல்வித்துறையின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குறியது. அறிவித்ததுடன் நிறுத்திவிடாமல் அமல்படுத்துவதிலும் முனைப்பு காட்டினால் அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஒரு சபாஷ் போடலாம். சபாஷ் அமைச்சரே சபாஷ்.

–பாரதி பித்தன்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close