`இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்!'- விருதை பெற்றார் தமிழிசை

  ஐஸ்வர்யா   | Last Modified : 29 Oct, 2018 05:23 pm

tamilisai-soundararajan-got-award

பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜனுக்கு ‘இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்’ விருதை அமெரிக்காவைச் சேர்ந்த குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கர் நிறுவனம் வழங்கியது.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கர் நிறுவனம் சார்பில் அமெரிக்க செனட்டர் உயர்திரு.டேனி.கே.டேவிஸ் தலைமையில் விழா நடைபெற்றது. அதில் அமெரிக்க பாராளுமன்றத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ் செனட்டர்  உயர்திரு.ராஜா கிருஷ்ணமூர்த்தி அவர்களால் “இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்” என்ற சர்வதேச விருது தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு வழங்கப்பட்டது. இவ்விருதை பெற்றுக்கொண்ட தமிழிசை தமிழ்நாட்டு மக்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் நன்றியுடன் அர்பணிக்கின்றேன் என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவரான குமரி அனந்தனின் மகளும், மருத்துவருமான தமிழிசை சௌந்தர்ராஜன், பாஜகவின் மாநில பொது தலைவராக இருந்து வருகிறார். மாநில பொதுச் செயலாளர், துணைத்தலைவர், தேசிய செயலாளர் என பல்வேறு பொறுப்புகளையும் வகித்து வந்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல், தமிழக பாஜக கட்சியின் தலைவராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in  

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close