எந்த கட்சியாக இருந்தாலும் பாஜக பெயரை கூறாமல் அரசியல் நடத்த முடியாது- பொன். ராதா

  ஐஸ்வர்யா   | Last Modified : 29 Oct, 2018 06:29 pm
pon-radhakrishnan-press-meet

அதிமுக உட்பட எந்த கட்சியாக இருந்தாலும் பாஜக பெயரை கூறாமல் அரசியல் நடத்த முடியாது என மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

வேலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலுக்கு பா.ஜ.க தன்னை தயார்படுத்தி வருகிறது. நிச்சம் தமிழகத்தில் பா.ஜ.க வலுவான கூட்டணியை அமைக்கும். அந்த கூட்டணியே அதிகபடியான இடங்களை கைப்பற்றும். தமிழகத்தில் பா.ஜ.க தலைவர்கள் எல்லா நிலைகளிலும் தகுதி பெற்ற தலைவர்களாக உள்ளார்கள். அது தமிழகத்திற்க்கு வருகிற காலகட்டங்களில் வரப்பிரசாதமாக அமையும்.  20 தொகுதிக்கான இடைதேர்தல் குறித்து பா.ஜ.கவின் தமிழக பிரிவுதான் முடிவு செய்யும். இடைத்தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் வரும் போது முடிவு செய்யப்படும்" என்றார். 

மேலும், ”அதிமுக உட்பட எந்த கட்சியாக இருந்தாலும் பாஜக பெயரை கூறாமல் அரசியல் நடத்த முடியாது. தமிழகத்தில் நான் 20 ஆரம்ப சுகாதாரம் நிலையங்களுக்கு சென்றுள்ளேன். எங்குமே டெங்கு உயிரிழப்பு நிகழ்ந்ததாக மருத்துவர்கள் கூறவில்லை. டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்பில் முன்பு இருந்ததை விட விழிப்புணர்வு அதிகம் இருபதுபோல் தெரிகிறது. இன்னும் அதித கவனம் செலுத்தி கிருமி, மற்றும் கொசு இல்லாத அளவுக்கு ஒழிக்க வேண்டும். தமிழக அரசின் செயல்பாட்டில் முன்னேற்றம் உள்ளது, தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போதுதான் வளர்ச்சியின் உச்சத்தை தமிழகம் எட்டும்” எனக் கூறினார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close