`சர்கார்’ ஹீரோயினைக் காணக்குவிந்த கூட்டம்... போலீசார் தடியடி!

  ஐஸ்வர்யா   | Last Modified : 29 Oct, 2018 07:39 pm
keerthi-suresh-at-tirupattur

திருப்பத்தூரில் நகைக் கடை திறப்பு விழா ஒன்றில் நடிகை கீர்த்தி சுரேஷ் பங்கேற்றார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. 

நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சர்கார் படம் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் அவர் விஜய்க்கு இரண்டாவது முறையாக ஜோடியாகி இருக்கிறார். இதுதவிர இவர் நடித்திருந்த சண்டைக்கோழி படமும் சமீபத்தில் திரைக்கு வந்தது. முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தனக்கான தனி ரசிகர் பட்டாளத்தையே தனது கைவசம் வைத்துள்ளார்.

வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் நகைக் கடை திறப்பு விழா ஒன்றில் நடிகை கீர்த்தி சுரேஷ் பங்கேற்றார். கீர்த்தி சுரேஷை காண்பதற்காக அப்பகுதியில் ஏராளமான இளைஞர்கள் குவிந்தனர். அவரது காரை ரசிகர்கள் சூழ்ந்ததால் அவரால் வெளியே வர முடியவில்லை. அதனைத்தொடர்ந்து காரை சூழ்ந்திருந்தோர் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர்.அதன்பின் காரில் இருந்து வெளியே வந்த கீர்த்தி சுரேஷ், நகைக்கடை திறப்பு விழாவில் பங்கேற்றார். நடிகை கீர்த்தி சுரேசைப் பார்க்க வந்த கூட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம், 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close