சமரசத்தில் முடிந்த சர்கார் படக்கதை விவகாரம்!

  Newstm Desk   | Last Modified : 30 Oct, 2018 11:29 am
sarkar-story-issue-hearing-is-going-in-madras-hc

சர்கார்’ படக்கதை விவகாரத்தில் கதாசிரியர் வருண் ராஜேந்திரனுடன் சமரசம் ஏற்பட்டு விட்டதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார். 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. தீபாவளியன்று வருகிற நவம்பர் 6ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. 

இந்த சூழ்நிலையில், தன்னுடைய கதை திருடி ஏ.ஆர்.முருகதாஸ் 'சர்கார்' என்ற படத்தை எடுத்துள்ளதாக  வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 'செங்கோல் என்ற பெயரில் தான் ஒரு கதையை பதிவு செய்திருந்த நிலையில் அதை திருடி சர்கார் படத்தை எடுத்துள்ளனர் எனவும், அப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். 

கடந்த 25ம் தேதி விசாரணை நடந்த இந்த வழக்கில், சன் பிக்சர்ஸ் நிறுவனமும், தென்னிந்திய கதை ஆசிரியர்கள் சங்கமும் வருகிற 30ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது. மேலும், 'செங்கோல்' கதையும், சர்கார் கதையும் ஒன்று தான் என இயக்குநர் கே. பாக்யராஜும் தெரிவித்திருந்தார். 

இந்த சூழ்நிலையில் வழக்கின் இன்றைய விசாரணையில், கதாசிரியர் வருண் ராஜேந்திரனுடன் சமரசம் ஏற்பட்டு விட்டதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார். சன் பிக்சர்ஸும் இந்த தகவலை நீதிமன்றத்தில் உறுதி செய்தது. 

இதையடுத்து தீர்ப்பு சற்று நேரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close