சென்னை - ரூ.5.78 கோடி கொள்ளை வழக்கில் 5 பேர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்

  டேவிட்   | Last Modified : 30 Oct, 2018 02:44 pm

salem-chennai-rail-robbery

சேலம் - சென்னை ரயில் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த முக்கிய குற்றவாளிகளான மொஹர்சிங் உள்ளிட்ட 5 பேரையும் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்படுத்தினர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ரூ.5.78 கோடி கொள்ளையடித்த வழக்கில் ஏற்கனவே தினேஷ், ரோகன் ஆகிய இரண்டு பேர் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கில் மேலும் 5 பேரை சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் இன்று சைதாப்பேட்டை 11 வது குற்றவியல் நீதிமன்றத்தில் மேஜிஸ்டிரேட் பிரகாஷ் முன்னிலையில் ஆஜர்படுத்தியுள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள மொஹர் சிங், காளியா, மகேஷ், பில்த்தியா, ருசி ஆகிய இந்த 5 பேரும் ஏற்கனவே ஒரு கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு மத்தியப் பிரதேச சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அவர்களுக்கு இந்த வழக்கில் தொடர்புள்ளதாக துப்பு துலங்கியதையடுத்து அவர்களை Transit Warrant மூலம் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் சென்னை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். மேலும் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் சார்பில் அவர்கள் 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு அளிக்கப்பட்டுள்ளது. மேஜிஸ்டிரேட் பிரகாஷ் முன்னிலையில் பூட்டிய அறைக்குள்  அவர்கள் 5 பேரிடமும் விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவில் அவர்கள் ஐந்து பேரையும் இன்று முதல் நவ.12 ஆம் தேதி வரை 14 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மேஜிஸ்டிரேட் பிரகாஷ் அனுமதியளித்தார். இதனை தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் காவல்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்க அழைத்து சென்றனர். இதன்மூலம் இந்த வழக்கில் வேறுபல திருப்பங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close