சென்னையில் இடைவெளிவிட்டு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

  Newstm Desk   | Last Modified : 31 Oct, 2018 12:42 pm
weather-forecast

தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் இன்று முதல் மழை பெய்யத் தொடங்கும் என்றும் சென்னையில் இடைவெளி விட்டு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதியிலும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவி வருவதாகவும், இதனால் தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்தார்.

மேலும், அடுத்துவரும் இரண்டு நாட்களுக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் அமைந்துள்ளதாகவும், தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசான மழை தொடங்கியுள்ளதாகவும் பாலசந்திரன் தெரிவித்தார்.  கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கம், தரமணி, மாமல்லபுரம், சென்னை நுங்கம்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் ஆகிய இடங்களில்1 செமீ மழை பதிவாகிள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close