எங்களை மிரட்டி ஆட்சிக்கு வர நினைக்கின்றனர்: எடப்பாடி பழனிசாமி

  ஐஸ்வர்யா   | Last Modified : 30 Oct, 2018 05:43 pm
cm-edappadi-palanisamy-speech

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இல்லாததால் எங்களை மிரட்டி ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பசும்பொன்னில் தேவர் திருவுருவச் சிலைக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தேவர் திருமகனாரின் 111வது ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து அதாவது 1979 முதல் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. எம்.ஜி.ஆர் தான் தேவர் பெயரை ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து பிரிந்த சிவகங்கை மாவட்டத்திற்கு அறிவித்தார்கள். ஜெயலலிதா தேவர் திருவுருவச் சிலைக்கு தங்கக் கவசம் வழங்கினார்கள். இங்கு வேறு எதுவும் அரசியல் பேச விரும்பவில்லை. தேவர் அய்யாவை வணங்குவதற்காகத்தான் வந்தேன். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இல்லாததால் எங்களை மிரட்டி ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுக்கவில்லை, பாதை மாறி சென்றவர்களுக்கே அழைப்பு விடுக்கப்பட்டது” என்று கூறினார். 

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close