குணமா சொல்லனும் போனை உடைக்க கூடாது! சிவக்குமாரை கலாய்த்த நெட்டிசன்ஸ்

  ஐஸ்வர்யா   | Last Modified : 30 Oct, 2018 06:41 pm
sivakumar-selfie-issue

செல்பி பிடிக்காதுன்னா வீட்டிலேயே இருக்கனும் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். நடிகர் சிவக்குமார் தன்னோடு செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரின் செல்போனை தட்டிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமூக வலைதலங்களில் வேகமாக பரவிவரும் இந்த வீடியோவின் மூலம் நெட்டிசன்ஸ் சிவக்குமாரை கோபமாக கேலி செய்து வருகின்றனர். ஆனால் இன்னொரு சாரார் ஒருவரின்  அனுமதியின்றி அவரை புகைப்படம் எடுப்பது அந்த நபருக்கு எரிச்சலையே ஏற்படுத்தும் எனவே சிவக்குமார் செய்தது சரியே என்று வாதிட்டு வருகின்றனர்.

நட்சத்திர மோகத்தில் அலையும் நம் ரசிகர்களுக்கு இதுபோன்ற செயல்களாவது மாற்றத்தை கொண்டுவருமா என தெரியவில்லை. என்னதான் இருந்தாலும் இதுபோல அத்துமீறும் ரசிகர்களிடம் பொறுமையாக எடுத்து சொல்லி தடுத்திருக்கலாம் என நடுநிலையாளர்கள் தங்கள் கருத்தை கூறியுள்ளனர். அதே நேரத்தில், பொது இடத்தில் பிரபலங்களுடன் செல்பி எடுக்கும் முன் அவர்களுடன் அனுமதி கேட்க வேண்டும். அந்த இளைஞர் நடந்து கொண்டது தவறு எனவும் சிலர் சிவக்குமாருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இது அறுவருக்கத்தக்க, வெட்கப்பட வேண்டிய செயல்.

ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது. உங்களுக்கு செல்பி எடுப்பது பிடிக்கவில்லை எனில் வீட்டிலேயே இருக்க வேண்டும். நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

சிவக்குமார் தட்டிவிடுவதற்கு முன் பதிவான புகைப்படத்தை எடுத்து ‘ இது ஒன் மில்லியன் போட்டோ’ என சிலர் டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். பலருக்கு யோகாவையும், தியானைத்தையும் சொல்லிக்கொடுப்பவர் பொது இடத்தில் இப்படி கட்டுப்பாடு இல்லாமல் கோபப்படலமா? எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கிடையில் மக்கள் நான் செய்ததை தவறு என நினைகின்றனர் எனவே நான் பொது இடத்தில் நடந்துக்கொண்டதற்காக மன்னிப்பு கேட்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Newstm.in 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close