பசுமை பட்டாசுனா என்ன? பச்சையா இருக்குமா?

  ஐஸ்வர்யா   | Last Modified : 30 Oct, 2018 08:22 pm
what-is-green-firecrackers

அது என்ன பசுமை பட்டாசு, பசுமை பட்டாசுனா பச்சையா இருக்குமா என நெட்டிசன்கள் கேளிக்கையான கேள்விகளை முன் வைத்து வருகின்றனர். அப்போ பசுமை பட்டாசு என்றால் என்ன? என்பதை பார்க்கலாம். 

இந்தியா முழுவதும் பட்டாசு விற்பனையை தடை செய்யமுடியாது என்று அண்மையில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், சில நிபந்தனைகளின் அடிப்படையில் பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி தீபாவளியின்போது 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்கலாம் மற்றும் சத்தம் மற்றும் காற்று மாசு ஏற்படாதாத பட்டாசுகளை அதாவது பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. 

'பசுமை பட்டாசு' என்பது தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்துள்ள நவீன பட்டாசு வகையாகும். பார்ப்பதற்கு வழக்கமான பட்டாசு போலவே இருக்கும் பசுமை பட்டாசு, வெடிக்கும்போது குறைவாகவே மாசுபடுத்துமாம். சத்தமும் அதிகமாக வராதாம். ஆக மொத்தம் உச்ச நீதிமன்றத்தின் அனைத்து கட்டளைகளும் இந்த பசுமை பட்டாசில் அடங்கும். சாதாரண பட்டாசுகள் 100% சதவிதம் அசுத்த வாயுவை வெளியிட்டால், பசுமை பட்டாசுகள் 40 முதல் 50% குறைவான நச்சு வாயுவை வெளியிடும். இதனால் காற்று மாசு ஏற்படாது எனக் கூறமுடியாது குறைவான மாசு ஏற்படும். பசுமை பட்டாசுகள் நைட்ரஜன் மற்றும் கந்தக வாயுக்கள் வெளியேற்றும் என கூறப்படுகிறது. 

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close