வாட்ஸ் அப்பில் வெளிவந்த சர்க்கார் ஸ்டிக்கர்ஸ்

  ஐஸ்வர்யா   | Last Modified : 30 Oct, 2018 08:29 pm
whatsapp-officially-announces-sarkar-stickers

இளைஞர்களை கவரும் வகையில் வாட்ஸ் அப்பில் சர்க்கார் ஸ்டிக்கர்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சாதாரணமாக எழுத்துகளில் சொல்லும் விஷயத்தை எமோஜிகளின் மூலமாகவோ, ஜிஃப் பைல்கள் மூலமாகவோ அல்லது ஸ்டிக்கர்ஸ்களின் மூலமாகவோ சொன்னால் இன்னும் ஆர்வமாகவும் உற்சாகமாகவும் இருக்கும். அந்த வகையில் உணர்வுகளையும், குறுகிய நேரத்தில் எளிதாக புரிய வைக்கவும் நாம் எமோஜிகள் போன்ர உருவத்தை பயன்படுத்துவதுண்டு. அந்த வகையில் தற்போது ஸ்டிக்கர்ஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வார்த்தைகளில் விவரிக்க முடியாத உணர்வுகளை இன்னும் எளிமையாகப் பகிரலாம் என்கிறது வாட்ஸ்அப்.

குறிப்பாக இளைஞர்கள் பயன்படுத்தும் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் இந்த ஸ்டிக்கர்ஸ் வலம்வருகிறது. குறிப்பிட்டஒரு விஷயத்தையோ அல்லது பிரபலங்களின் பிறந்த நாள் மற்றும் படம் ரிலீஸின்போது ஸ்டிக்கருக்கென எமோஜி வெளிவரும். ஆனால் இதுவரை வாட்ஸ் அப்பில் இப்படி ஒரு அம்சங்கள் வெளிவரவில்லை. வாட்ஸ் அப்பை அப்டேட் செய்து எமோஜிக்கு அருகே இருக்கும் ஸ்டிக்கர்ஸ் பட்டனை கிளிக் செய்து புதிய ஸ்டிக்கர் பேக்குகளையும் பதிவிறக்கிக் கொள்ளலாம். அந்த வகையில் சர்க்கார் ஸ்டிக்கர்ஸ்களையும் டவுன்லோடு செய்து கொள்ள முடியும். 

Newstm.in 


 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close