வேலூர், கடலூர் மற்றும் திருவண்ணாமலையில் உள்ள அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்தில் நவ 3 அன்று சிறப்பு பாஸ்போர்ட் முகாம்

  சுஜாதா   | Last Modified : 31 Oct, 2018 06:27 am

chennai-has-opened-a-post-office-passport-seva-kendra-popsk-at-the-head-post-office-hpo-vellore-cuddlore-thiruvanamalai

பொது மக்களின் தேவையை நிறைவேற்றவும், நியமனங்கள் பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டதன் காரணமாக, அடிக்கடி பயணம் செய்வோர் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஏதுவாகவும், சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், நவம்பர் 3, 2018 சனிக்கிழமை அன்று, வேலூர், கடலூர் மற்றும் திருவண்ணாமலையில் உள்ள அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்தில் சிறப்பு பாஸ்போர்ட் முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது.

வேலூர், கடலூர் மற்றும் திருவண்ணாமலையில் உள்ள அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்கள்,  நவம்பர் 3, 2018 சனிக்கிழமை அன்று, பிற வழக்கமான வேலை நாளைப் போன்று செயல்படும், விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தின்படி விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்படும். இந்த முகாம் மூலம், சுமார் 195 விண்ணப்பதாரர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பாஸ்போர்ட் முகாமில் பங்கேற்க விரும்பும் அனைத்து விண்ணப்பதாரர்களும், ‘www.passportindia.gov.in’, என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் ஆன்லைன் முறையில் பதிவு செய்து, விண்ணப்பப் பதிவு எண் (ஏ ஆர் என்) பெறுவதுடன், இணையதளம் மூலமாகவே கட்டணத்தையும் செலுத்தி, நேர்காணலுக்கு நேர ஒதுக்கீடு பெறலாம். இந்த முகாமில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பப் பதிவு எண்ணினைக் கொண்ட அச்சு நகலுடன், தேவையான அசல் சான்றிதழ்கள் மற்றும் சுய சான்றொப்பமிட்ட சான்றிதழ்களின் பிரதி ஒன்றையும் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்திற்கு எடுத்து வர வேண்டும். புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க பாஸ்போர்ட் வகைகளுக்கான  விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

 நவம்பர் 3, 2018 சனிக்கிழமை அன்று நடைபெற உள்ள முகாமில் பங்கேற்பதற்கான நேர ஒதுக்கீடு பற்றிய விவரங்கள், அக்டோபர் 31, 2018 (புதன் கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு வெளியிடப்படும். முகாம் நாளன்று அவரவருக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்படும். நிறுத்தி வைக்கப்பட்ட மற்றும் மறுக்கப்பட்ட டோக்கன்கள் உட்பட  காவல்துறையின் நடத்தைச் சான்றிதழ், நேரடியாகப் பெறுதல் ஆகியவற்றுக்கான    விண்ணப்பங்கள் இந்த முகாமின் போது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.