குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரூ.1000: புதுச்சேரி முதல்வர்!

  Newstm Desk   | Last Modified : 31 Oct, 2018 02:35 pm
rs-1000-for-every-family-holding-ration-card-pondy-cm

புதுச்சேரியில் குடும்பம் ஒன்றுக்கு ரூ.1000 தீபாவளி பரிசாக வழங்கப்படும் என்று புதுச்சேரி அமைச்சரவை கூட்டத்துக்கு பின் முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். ரேஷன்கார்டு வைத்து உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.1000 தீபாவளி பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் மாதம் 6ம் தேதி கொண்டாடப்படுகிறது. புதுச்சேரி மக்களுக்கு தீபாவளி பண்டியை முன்னிட்டு ஆண்டுதோறும், இலவச வேட்டி, சேலை வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு இலவச வேட்டி, சேலை வழங்குவது குறித்து அறிவிப்பு எதுவும் புதுச்சேரி அரசு சார்பில் வெளியிடவில்லை. இதற்கு பதிலாக பணம் வழங்கக்கோரி பலர் வலியுறுத்தினர்.

இந்த கோரிக்கையை ஏற்ற முதல்வர், ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதற்கிடையே, புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை, அமைப்புசாரா தொழிலாளர் நலச்சங்கம் ஆகியவற்றில் பதிவு செய்துள்ள 30 ஆயிரம் தொழிலாளர்களுக்கு தீபாவளி கூப்பன் ரூ.1000 வழங்கப்பட்டது.

மேலும் 3 மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை எனக்கூறி கடந்த 25 ம் தேதி முதல் புதுச்சேரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அரசு போக்குவரத்து ஊழியர்களின் வங்கி கணக்கில் அவர்களது 2 மாத சம்பளம் செலுத்தப்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close