• வியட்நாம், ஆஸ்திரேலியாவுக்கு குடியரசுத் தலைவர் அரசுமுறைப் பயணம்
  • ஜனவரி பேரணி ஓர் திருப்புமுனை: மம்தா பானர்ஜி
  • தேனி, திருவாரூரில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை
  • இன்று முதல் வழக்கம் போல் ரயில்கள் இயங்கும்: தெற்கு ரயில்வே
  • அரையிறுதியில் தமிழக ரோல்பால் அணிகள்

மேல்முறையீடு இல்லை, தேர்தலை சந்திக்கிறோம்: டி.டி.வி பேட்டி

  Newstm Desk   | Last Modified : 31 Oct, 2018 10:39 am

willl-face-election-ttv-dinakaran

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கில் வந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதில்லை, தேர்தலை சந்திக்கிறோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

மதுரையில் அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியின் தலைவர் டி.டி.வி.தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "18 சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கில் மேல்முறையீடு செய்யப்போவதில்லை. இடைத்தேர்தலை சந்திக்க உள்ளோம். 20 தொகுதிகளுக்கும் எப்போது தேர்தல் வந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி வெற்றி பெறும். ஆனால் தேர்தல் அறிவிப்பதற்குள் சுனாமி வருகிறது, புயல் வருகிறது என்று கூறுவார்கள். தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும். 

ஆர்.கே நகர் தேர்தலின் போதே நாங்கள் வெற்றி பெறமாட்டோம் என்று கூறினார்கள். ஆனால் என்ன ஆனது என்பது அனைவருக்கும் தெரியும். ஜெயக்குமார் என்னை மண் குதிரை என்று சொல்கிறார். அவர் யார் என்பது தற்போத அனைவருக்கும் தெரிந்துவிட்டது. எனவே அவர்பேசுவதை பற்றி பேசி என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. மண் குதிரை யார் என்று மக்களுக்கு தெரியும். 

பட்டாசு தொழிலை நம்பி தென்மாவட்டங்களில் பல குடும்பங்கள் உள்ளன. எனவே இந்த விவகாரத்தில் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தன் மீது சி.பி.ஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டபோது முதல்வர் காட்டிய வேகத்தை இதிலும் காட்டவேண்டும்" என்றார். 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.