தீபாவளி சிறப்பு ஏற்பாடு: 11 வரை மெட்ரோ சேவை நீட்டிப்பு

  Newstm Desk   | Last Modified : 31 Oct, 2018 11:42 am
deepavali-metro-service-till-11-p-m-on-november-2-3

தீபாவளிக்கு சிறப்பு ஏற்பாடாக நவம்பர் 2, 3ம் தேதிகளில் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இரவு 11 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் அடுத்த மாதம் 6ம் தேதி தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது. தீபாவளி செவ்வாய் கிழமையன்று வருவதால் அதற்கு முந்தைய வாரத்தின சனி மற்றும் அந்த வாரத்தின் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களும் விடுமுறை நாளாகி உள்ளன. எனவே அந்த நாட்களில் சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கு வசதியாக நவம்வர் 2,3  ஆகிய தேதிகளில் சென்னை மெட்ரோ ரயில் சேவை இரவு 11 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 

வழக்கமாக  இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இருக்கும். இந்நிலையில் சென்னை சென்ட்ரல், எழும்பூர், கோயம்பேடு ஆகிய இடங்களுக்கு செல்ல வசதியாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close