தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடக்கம்!

  Newstm Desk   | Last Modified : 31 Oct, 2018 11:43 am
diwali-special-bus-ticket-reservation-started

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூருக்கு செல்வதற்காக பேருந்து முன்பதிவு இன்று தொடங்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இதனை தொடங்கி வைத்தார். 

இந்தாண்டு தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் 6ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து சென்னையில் வேலை செய்யும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வர். இதனால் எப்போதுமே பண்டிகை காலங்களில் மக்களின் வசதிக்கேற்ப அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். 

இந்தாண்டும்  மொத்தமாக தீபாவளி சிறப்பு பேருந்துகளாக 20,567 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதில், சென்னையில் இருந்து 11,367 பேருந்துகளும், பிற மாவட்டங்களில் இருந்து 9,200 பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்காக போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் நவம்பர் 3, 4, 5 ஆகிய நாட்களில் மட்டும் செயல்பாட்டில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து இந்த தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று தொடங்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இதனை தொடங்கி வைத்தார். 

கோயம்பேட்டில் 25 முன்பதிவு மையங்களும், தாம்பரத்தில் ஒரு முன்பதிவு மையமும் திறக்கப்பட்டுள்ளது. வெளியூர் செல்ல விரும்பும் பயணிகள் நேரடியாக சென்றும், ஆன்லைனிலும் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close