• வியட்நாம், ஆஸ்திரேலியாவுக்கு குடியரசுத் தலைவர் அரசுமுறைப் பயணம்
  • ஜனவரி பேரணி ஓர் திருப்புமுனை: மம்தா பானர்ஜி
  • தேனி, திருவாரூரில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை
  • இன்று முதல் வழக்கம் போல் ரயில்கள் இயங்கும்: தெற்கு ரயில்வே
  • அரையிறுதியில் தமிழக ரோல்பால் அணிகள்

தமிழகத்தில் இந்த நேரத்தில் தான் பட்டாசு வெடிக்க வேண்டும்!

  Newstm Desk   | Last Modified : 31 Oct, 2018 04:41 pm

sc-order-on-diwali-crackers

தமிழகத்தில் காலையில் ஒரு மணி நேரமும், மாலையில் ஒரு மணி நேரமும் பட்டாசு வெடிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  அதன்படி காலை 4 மணி முதல் 5 மணி வரையிலும், மாலை 9 முதல் 10 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுசூழல் பிரச்னைகளை கருத்தில் கொண்டு பட்டாசு வெடிக்க நாடு முழுவதும் தடை விதிக்க வேண்டும் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.  இந்த வழக்கில், 'நாடு முழுவதும் பட்டாசு தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ, வெடிக்கவோ தடை இல்லை' என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. ஆனால் அதே நேரத்தில் பட்டாசு வெடிக்க சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. 

இத்துடன், தீபாவளி தினத்தன்று இரவு 8 மணி முதல் 10 மணிவரை மொத்தமாக வெறும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். கிறிஸ்துமஸ், புத்தாண்டு தினத்தன்று இரவு 11.55  மணி முதல் 12.30 மணி வரை 35 நிமிடங்கள் மட்டுமே வெடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

தொடர்ந்து, இந்த உத்தரவுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் விசாரணையில் தமிழக அரசே நேரத்தை முடிவு செய்துகொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. 

இதையடுத்து, தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் தமிழகத்தில் காலையில் ஒரு மணி நேரமும், மாலையில் ஒரு மணி நேரமும் பட்டாசு வெடிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதன்படி காலை 4 மணி முதல் 5 மணி வரையிலும், மாலை 9 முதல் 10 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென் மாநிலங்கள் அனைத்திற்கும் இந்த உத்தரவு பொருந்தும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.