அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கும்- வானிலை ஆய்வு மையம்

  Newstm Desk   | Last Modified : 31 Oct, 2018 02:11 pm
weather-forecast

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் என்றும் சென்னையில் இடைவெளி விட்டு மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. 

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தென்மேற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது. அதேபோல் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியும் நிலவி வருகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கும். அதைத்தொடர்ந்து உள்மாவட்டங்களிலும் தொடங்கும். 

இதனால் அடுத்த  24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் பரவலாக மிதமான மழையும், சென்னையை பொறுத்தவரை இடைவெளி விட்டு மழை பெய்யும். 

அதேபோன்று கடந்த 24 மணி நேரத்தில் எண்ணூர், மகாபலிபுரத்தில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது" என்றார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close