நீதிபதி ஆறுமுகசாமி மருத்துவமனையில் அனுமதி!

  Newstm Desk   | Last Modified : 31 Oct, 2018 02:23 pm

judge-aarumugasamy-admitted-in-hospital

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் நீதிபத்தி ஆறுமுகசாமி உடல்நலக்குறைவு காரணாமாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக, 75 நாட்கள்  அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணைக் கமிஷனை அமைத்து தமிழக அரசு ஆணை வெளியிட்டது. 

அதன்படி விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் 3வது முறையாக கால நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. 

இந்நிலையில், நீதிபதி ஆறுமுகசாமி உடல்நலக்குறைவு காரணமாக இன்று சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் விசாரணை சற்று தாமதமாகலாம் என கூறப்படுகிறது. 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.