திருப்பதியில் நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!

  ஐஸ்வர்யா   | Last Modified : 31 Oct, 2018 08:06 pm
tirupati-bans-plastic-carry-bags

திருப்பதியில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை வியாழக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.

திருப்பதியில் கடந்த 2-ம் தேதி காந்தி ஜெயந்தி நாள் முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு நகராட்சி தடை விதித்தது. இதை தொடர்ந்து திருப்பதி கோவிலிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை விதித்து தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, நாளை முதல் திருமலையிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை நடைமுறைக்கு வருகிறது.

திருமலைக்கு வரும் பக்தர்களின் உடைமைகளை வியாழக்கிழமை நாளை முதல் சுகாதார ஆய்வாளர் தலைமையில் சோதனை நடத்தி, பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வந்தால் ரூ.5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close