மக்களவை தேர்தலுடன் 20 தொகுதிக்கும் இடைத்தேர்தல்?- இல. கணேசன்

  ஐஸ்வர்யா   | Last Modified : 31 Oct, 2018 08:33 pm
ila-ganesan-press-meet

தமிழகத்தில் 20 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற நாடாளுமன்ற தேர்தலோடு நடைபெறவாய்ப்பு இருப்பதாக பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுடம் பேசிய இல. கணேசன்,  “பெட்ரோல், டீசல் விலை விரைவில் குறைய வாய்ப்பு இருக்கிறது. மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மத்திய அரசு, மாநில அரசை நகராட்சி போல் நடத்துகிறது. ஜிஎஸ்டி அதிமுகவின் ஒப்புதலோடுதான் நிறைவேற்றப்பட்டது. ஜிஎஸ்டி கவுன்சில் மூலம் மாநில அரசுகள் கொடுத்த திருத்தங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 20 சட்டமன்ற இடைத்தேர்தல் நாடாளுமன்ற தேர்தலோடுதான் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் தினகரனின் முயற்சி தோல்வி அடைந்துள்ளது. இதன் காரணமாகதான் தேர்தலை தினகரன் சந்திக்க இருக்கிறார்” என்று கூறினார். 

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close