திருவாரூர் கோவிலில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு!

  Newstm Desk   | Last Modified : 01 Nov, 2018 11:39 am
inspection-is-going-on-thiruvarur-thiyagarajar-temple

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சிலைகளின் தொன்மை குறித்து சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

தமிழகத்தில் ஐ.ஜி பொன். மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பல்வேறு கோவில்களில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் திருவாரூர் கோவில்களில் இன்று 2ம் கட்ட ஆய்வு தொடங்கியுள்ளது. முன்னதாக திருவாரூர் தியாகராஜர் கோவிலில் கடந்த அக்டோபர் 21, 22 ஆகிய தேதிகளில் ஆய்வு நடைபெற்றது. 

இதைத்தொடர்ந்து இன்று முதல் நவம்பர் 4ம் தேதி வரை திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு கோவில்களில் ஆய்வு நடைபெற உள்ளது. அங்குள்ள சிலைகளின் தொன்மை குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close