வடகிழக்கு பருவமழை தொடங்கியது! 2 நாட்களுக்கு மழை - வானிலை ஆய்வு மையம்

  Newstm Desk   | Last Modified : 01 Nov, 2018 12:55 pm
weather-forecast

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியுள்ளது என்றும், அடுத்த இரண்டு நாட்கள் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் கே.பாலச்சந்திரன், "தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வட கிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியுள்ளது. தற்போது இலங்கை முதல் தென் மேற்கு வங்கக்கடல் பகுதி வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது. அதேபோல தென் தமிழகத்தில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நவம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழையும், கடலோரப் பகுதிகளில் கனமழையும் பெய்யும். காற்றின் வேகம் இயல்பாகவே இருக்கும். எனவே மீனவர்களுக்கு எந்தவித எச்சரிக்கையும் இல்லை. 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புழலில் 11 செ.மீ மற்றும் கேளம்பாக்கத்தில் 10 செ.மீ மழை பெய்துள்ளது. அடுத்த இரு நாட்களில் சென்னையில் ஓரிரு இடங்களில் இடைவெளி விட்டு மழை பெய்யும். 

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் 12% அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணக்கிட்டுள்ளது" என்று கே. பாலசந்திரன் அறிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close