வனத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 01 Nov, 2018 04:51 pm
diwali-bonus-for-forest-department-workers

தமிழகத்தில் அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், போக்குவரத்துத் துறை ஊழியர்களைத் தொடர்ந்து வனத்துறை ஊழியர்களுக்கு தீபாவளிக்கு 20% போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி, அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் போனஸ் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் அரசு பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டது. அதன்படி, லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% போனஸ், நட்டம் அடைந்துள்ள பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10% போனஸ் மற்றும் கருணைத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு 20% போனஸ் அறிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

தொடர்ந்து இன்று வனத்துறை ஊழியர்களுக்கு தீபாவளிக்கு 20% போனஸ் வழங்கப்படுவதாக அறிவிப்பு  வெளியாகியுள்ளது. 8.33% போனஸ், 11.67% கருணைத்தொகை என சேர்த்து மொத்தமாக 20% போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close