நிர்மலா தேவி வழக்கில் ரகசிய விசாரணை! - நீதிமன்றம் உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 01 Nov, 2018 04:58 pm
nirmala-devi-case-update

நிர்மலா தேவி வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட  31 பேரிடம் ரகசிய விசாரணை நடத்தப்படும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்தியது தொடர்பாக பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு நீதிமன்றக்காவலில் உள்ளார். இது குறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கை திறந்த நீதிமன்றத்தில் நடத்தாமல், ரகசியமாக விசாரணை நடத்த வேண்டும் என சி.பி.சி.ஐ.டி. சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதே நேரத்தில் குற்றம் சாட்டப்பட்ட கருப்பசாமி, முருகன் தரப்பில் வழக்கை திறந்த நீதிமன்றத்தில் நடத்த வேண்டும் என மனு செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நீதிபதி முன்பாக நடைபெற்றது. இறுதியில், குற்றம் சாட்டப்பட்ட  31 பேரிடம் ரகசிய விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், இதர 114 பேரிடம் வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close