கூட்ட நெரிசலை தவிர்க்க 5 தற்காலிக பேருந்து நிலையங்கள்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 01 Nov, 2018 06:29 pm
generate-a-temporary-bus-stand

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காகவும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும் சென்னையில் 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 

தீபாவளி அன்று பலரும் சொந்த ஊருக்கு செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை அடுத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது குறித்த அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
 தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தீபாவளி பண்டிகையின்போது எளிதாக மக்கள் பயணம் செய்யும் வகையில், சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் நவம்பர் 3, 4, 5 ஆகிய நாட்களில் மட்டும் செயல்பாட்டில் இருக்கும். அதன்படி, ஆந்திரா செல்லும் பஸ்கள் அனைத்தும், மாதவரம் புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து புறப்படும்.

இசிஆர் வழியாக செல்லும் பஸ்கள் (கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம்) கே.கே.நகர் மாநகர போக்குவரத்துக்கழக பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும். விக்கிரவாண்டி மற்றும் பண்ருட்டி வழியாக செல்லும் பஸ்கள் (திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் வழித்தடத்தில் செல்லும் அனைத்து பஸ்களும்) தாம்பரம் சானடோரியம் அறிஞர் அண்ணா பஸ் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

திருவண்ணாமலை செல்லும் பஸ்கள், தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படுகிறது.
வேலூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் (பூந்தமல்லி வழியாக ஆற்காடு, ஆரணி, காஞ்சிபுரம், செய்யாறு, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஓசூர் ஆகிய இடங்களுக்கு செல்லும் பஸ்கள்) பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படுகிறது. மற்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் கோயம்பேட்டிலிருந்து இயக்கப்படும். மேலும் அனைத்து பேருந்து நிலையங்களில் இருந்தும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், வெளிமாவட்டங்களில் இருந்து வரும் அரசு பேருந்துகள் நிறுத்துமிடம் மற்றும் ஆம்னி பேருந்துகள் நிறுத்துமிடமும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து நெரிசலை முன்னிட்டு வரும் 3,4,5, மற்றும் 7 ம் தேதிகளில் பகல் 2 முதல் நள்ளிரவு 2 மனி வரை சென்னைக்குள் வரும் கனரக வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close