தீபாவளிக்காக சென்னையிலிருந்து 8 சிறப்பு ரயில்கள் இயக்க திட்டம்

  ஐஸ்வர்யா   | Last Modified : 01 Nov, 2018 06:58 pm
special-train-for-diwali

தீபாவளி அன்று பலரும் சொந்த ஊருக்கு செல்ல வசதியாகவும், கூட்ட நெரிசலை தடுக்கவும் சிறப்பு முன்பதிவில்லா ரயில்கள் இயக்கவுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.   

இது தொடர்பாக தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளிக்காக சென்னையிலிருந்து 4 சிறப்பு ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு தாம்பரம்-நெல்லை, தாம்பரம்-கோவை வழித்தடங்களில் 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. அதன்படி  தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு நவம்பர் 3, 5 தேதிகளில் காலை 9.30 மணிக்கு, முன்பதிவு வசதி இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. இதேபோன்று நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு நவம்பர் 4, 7 ஆகிய தேதிகளில் காலை 9.30 மணிக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும். மேலும் தாம்பரத்தில் இருந்து கோவைக்கு காலை 7.45 மணிக்கு நவம்பர் 3, 5 ஆகிய தேதிகளில் முன்பதிவு வசதி இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்க்கப்படும். மற்றும் கோவையிலிருந்து தாம்பரத்திற்கு நவம்பர் 4, 7 ஆகிய தேதிகளில் காலை 10 மணிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close