20 இடைத்தேர்தலில் விஜயகாந்தும் போட்டியிடுவார்: பிரேமலதா

  ஐஸ்வர்யா   | Last Modified : 01 Nov, 2018 07:23 pm
premaladha-vijayakanth-press-meet

20 இடைத்தேர்தலில் விஜயகாந்துக்கு போட்டியிட வாய்ப்பு தந்தால் தேமுதிக தேர்தலிலும் போட்டியிட தயார் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “போக்குவரத்து, சத்துணவு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினால் அதனை தேமுதிக ஆதரிக்கும். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் தேதிக்கு பிறகு அறிவிக்கப்படும். சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு மூலம் உலக கவனத்தை இந்தியா தன்பக்கம் திருப்பி உள்ளது. உலகிலேயே உயர்ந்த சிலை என்பது இந்தியாவிற்கு பெருமை என்றாலும் இந்த சிலை திறப்பதாலேயே எல்லா பிரச்னைக்கும் தீர்வு கிடைத்துவிட்டதா என்ற கேள்வி எழுகிறது. சிலையை திறந்ததுபோன்று மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும்ம் மோடி நிறைவேற்றினாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. வெறும் சிலை வைப்பதால் மட்டுமே இங்கு மக்கள் பிரச்னைகள் தீரப்போவதில்லை. இந்த சிலை வைத்ததன் மூலம் சர்தார் வல்லபாய் படேல் யார் என்பது பலருக்கு தெரிந்துள்ளது. சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை குறித்து தமிழ் மொழியில் தவறாக எழுதப்பட்டது கண்டனத்திற்கு உரியது

18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தவர்கள், அவர்களை ஏன் கைது செய்யவில்லை என்பது தான் தேமுதிகவின் கேள்வி. ஒரு பெண் நெருப்பாக இருந்தால் யாரும் நெருங்க முடியாது. சின்மயிக்கு எல்லாம் என்னால் பதில் கூற முடியாது. 20 இடைத்தேர்தலில் விஜயகாந்துக்கு போட்டியிட வாய்ப்பு தந்தால் தேமுதிக தேர்தலிலும் போட்டியிட தயார். சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குபவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்” என்றார்.

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close