ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது, விவி மினரல்ஸ் நிறுவனம் பணம் கொடுத்ததா?- டிடிவி

  ஐஸ்வர்யா   | Last Modified : 01 Nov, 2018 10:30 pm

ttv-dhinakaran-tweet

ரத்து செய்யப்பட்ட ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது, விவி மினரல்ஸ் நிறுவனம் எனக்கு இரண்டரை கோடி ரூபாய் கொடுத்ததாக ஒரு தவறான தகவல் பரப்பப்படுகிறது என டிடிவி தினகரன் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். 

விவி மினரல்ஸ் நிறுவன உரிமையாளர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் 6 ஆவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம் திசையன்விளையைத் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் விவி மினரல்ஸ் நிறுவனம் தமிழகம் உள்பட பல்வேறு இடங்களில் அதன் கிளை நிறுவனங்கள் உள்ளன. கடற்கரையில் உள்ள கனிமங்கள் நிறைந்த மணலை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவரும் இந்த நிறுவனத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து இந்நிறுவனத்தின் உரிமையாளர வைகுண்டராஜனின் வீடு, அலுவலகம் மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ரத்து செய்யப்பட்ட ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது, விவி மினரல்ஸ் நிறுவனம் எனக்கு இரண்டரை கோடி ரூபாய்  கொடுத்ததாக ஒரு தவறான தகவல் பரப்பப்படுகிறது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய பொய்யான தகவலை பரப்புபவர்கள் நிறுத்திக் கொள்ளாவிட்டால்,  சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார். 

Newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.