சென்னை ஐஐடி மாணவர்கள் சேர்ந்து, 'சக்தி' என்ற பெயரில் இந்தியாவின் முதல் மைக்ரோப்ராசசரை உருவாக்கியுள்ளனர். சர்வதேச தரத்திலான இந்த மைக்ரோப்ராசசரால், வெளிநாட்டு இறக்குமதிகளை நம்பியிருக்க வேண்டிய நிலை குறைய வாய்ப்புள்ளது.
கணினி, மொபைல், தொலைக்காட்சி என தொழில்நுட்ப உலகின் மையமாக விளங்குவது மைக்ரோப்ராசசர். ஆனால், மைக்ரோப்ராசசரை பொறுத்தவரையில், வெளிநாட்டு இறக்குமதிகளை மட்டுமே நம்பியுள்ளது இந்தியா. இந்நிலையில், இந்திய தொழில்நுட்ப கல்லூரியான ஐஐடியின் மாணவர்கள் சேர்ந்து, மைக்ரோப்ராசசரை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் விளைவாக, சண்டிகர் இஸ்ரோ மையத்தில், செமிகண்டக்ட்டர் ஆய்வகத்தில் வைத்து இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. தற்போது வெற்றிகரமாக ஐஐடி மாணவர்கள் இந்தியாவின் முதல் மைக்ரோப்ராசஸரை உருவாக்கியுள்ளனர். சக்தி என பெயரிடப்பட்டுள்ள இந்த மைக்ரோப்ராசசர், முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவடிமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. இந்தியவிலேயே உருவாக்கப்படுவதால், இந்த மைக்ரோப்ராசசரை வைரஸ் போன்ற தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு கம்மி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மைக்ரோப்ராசசரை, வயர்லெஸ் தொழில்நுட்பங்கள் கொண்ட, தொலைத்தொடர்பு, மற்றும் பாதுகாப்பு சார்ந்த சிறிய திட்டங்களுக்காக பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது.
newstm.in