நிச்சயதார்த்தம் முடிந்த 5வது நாளில் பள்ளி ஆசிரியை கொலை

  Newstm Desk   | Last Modified : 02 Nov, 2018 10:07 am
school-teacher-murdered-in-kumbakonam

கும்பகோணம் அருகே உமாமகேஸ்வரபுரம் சாலையில் தனியார் பள்ளி ஆசிரியை கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். 

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகில் உள்ள 108 சிவாலயம் பகுதியை சேர்ந்தவர் குமரவேல். இவரது மகள் வசந்தப்ரியா (வயது 25). இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற இவரை  மாலை பள்ளி முடிந்ததும் மர்ம நபர் ஒருவர் இரண்டு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். இதற்கான சிசிடிவி காட்சிகள் பதிவாகி உள்ளன. கும்பகோணம் அருகே உமாமகேஸ்வரபுரம் பகுதி காவிரி ஆற்றின் படித்துறையில் மர்மமான முறையில் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு ரத்தம் சொட்டிய நிலையில், கூச்சலிட்டு ஒடி வந்த வசந்தபிரியா சாலை ஓரத்திலேயே அப்படியே சரிந்து விழுந்து இறந்தார். 

இதனைக்கண்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. வசந்த பிரியாவின் சடலத்தை கைப்பற்றி திருவிடைமருதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட வசந்த பிரியாவிற்கு 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் இக்கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது.தப்பியோடிய நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close