நியூட்ரினோ திட்டத்திற்கு இடைக்காலத் தடை: தேசிய பசுமை தீர்ப்பாயம்

  Newstm Desk   | Last Modified : 02 Nov, 2018 10:53 am

ngt-stays-neutrino-project-at-theni

தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க இடைக்கால தடை விதித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 2011ம் ஆண்டு அனுமதி வழங்கியது. இதற்கு இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மாநில சுற்றுச்சூழல் தாக்கத்தின் மதிப்பீட்டு ஆணையம் இந்த திட்டத்திற்கு அனுமதி மறுத்தது.

இந்நிலையில் டாடா நிறுவனம் சமர்பித்த ஒரு மனுவை ஆய்வு செய்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தமிழக அரசிடம் ஆலோசனை கேட்காமலேயே ஆய்வக பணிகளை தொடரலாம் என அனுமதி வழங்கியது.

இதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்றது. கடந்த அக்டோபர் 9ம் தேதி நடைபெற்ற விசரணையின் போது தமிழக அரசு, தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஆர். ராகேஷ் சர்மா உள்ளிட்டோர் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தனது உத்தரவை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்நிலையில், நியூட்ரினோ திட்டம் தொடர்பான வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று தனது தீர்ப்பை அளிக்கப்பட்டது. 

அதில், மத்திய அரசின் அரசின் அனுமதிக்கு தடை விதிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் மறுத்துள்ளது. மேலும் வன விலங்கு வாரியத்தின் ஒப்புதலை பெற்று பின்னரே திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.