சர்கார் படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

  Newstm Desk   | Last Modified : 02 Nov, 2018 12:11 pm
case-filed-against-sarkar-movie

சர்கார் படத்திற்கு தியேட்டரில் கூடுதல் டிக்கெட் கட்டணம் வசூலிப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டதை அடுத்து, வழக்காக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் பதிலளித்துள்ளனர். 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படம் தீபாவளி விருந்தாக வருகிற நவம்பர் 6ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் கதை தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பாக அது முடிவுக்கு வந்தது.

இந்த சூழ்நிலையில் சர்காருக்கு எதிராக, அடுத்துஒரு விவகாரம் கிளம்பியுள்ளது. சர்கார் படத்திற்கு முன்பதிவு தொடங்கிய நிலையில், பல தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் தேவராஜன் முறையிட்டுள்ளார். 

இதுகுறித்து நீதிபதிகள், 'முறையீடு செய்தால் எடுத்து விசாரிக்க முடியாது. வழக்காக தாக்கல் செய்யும் பட்சத்தில் விசாரிக்கப்படும்' என தெரிவித்துள்ளனர். 

முன்னதாக, சமூக ஆர்வலர் தேவராஜன், சர்கார் உள்ளிட்ட படங்கள் ஒரு ரூபாய் அதிகம் வாங்கினாலோ, கூடுதல் காட்சிகள் திரையிட்டாலோ கண்டிப்பாக வழக்கு தொடர்வேன் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close