நளினி, கார்த்தி சிதம்பரம் மீதான கருப்புப் பண தடுப்பு சட்ட நடவடிக்கை ரத்து!

  Newstm Desk   | Last Modified : 02 Nov, 2018 01:56 pm
p-chidambaram-family-releaved-from-black-money-prevention-act-case

நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீதான கருப்புப் பண தடுப்பு சட்ட நடவடிக்கையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரத்தின் மீது ஏற்கனவே ஏர்செல் மேக்சிஸ் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு அவற்றின் மீதான விசாரணை நடைபெற்று வருகின்றன. 

இந்த நிலையில் அவரது மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி கார்த்தி ஆகியோர் மீது வருமான வரித்துறையினர் கருப்புப்பண தடுப்பு சட்ட நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். அதாவது அவர்கள் அமெக்கா, லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் சொத்துக்களை மறைத்தன் பேரில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவர்கள் மீது வழக்கும் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணை ஒருபக்கம் நடைபெற்று வருகிறது. 

இதையடுத்து, இதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நளினி சிதம்பரம்,  கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி கார்த்தி ஆகியோர் மீதான கருப்புப்பண சட்ட நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிள்ளது. மேலும் இது தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கையும் ரத்து செய்வதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close