சென்னை : இருசக்கர வாகனத்தில் வந்தவரை தாக்கி ரூ.10 லட்சம் கொள்ளை 

  டேவிட்   | Last Modified : 02 Nov, 2018 02:45 pm
chennai-about-10-lakhs-robbery-at-sevenwells

சென்னை ஏழுக்கிணறு பகுதியில் இருசக்கர மோட்டார் வாகனத்தில் வந்த நபரை சிறிய தாக்கி, அவர் கைப்பையில் வைத்திருந்த சுமார் 10 லட்சத்திற்கு மேலுள்ள பணத்தை கொள்ளையடித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை ஏழுக்கிணறு பகுதியில் உள்ள கிரிகோரி தெருவில் அடுத்தடுத்த வீடுகளில் வசிப்பவர்கள் நசீர் கான் மற்றும் ஜாபர் அலி. மாமன் மைத்துணர்களான இவர்கள் இருவரும் பர்மா பஜாரில் மொபைல் கடை வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு ஜாபர் அலி, கடையில் வேலை செய்யும் ஊழியரான ரஃபீக் கான் என்பவரிடம் 60 லட்சம் ரூபாய் அடங்கிய பணப்பையை கொடுத்து அதை வீட்டில் ஒப்படைக்கும்படி கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பணப்பையுடன் கடையில் இருந்து பணப்பையுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். ரஃபீக் கான் ஏழுக்கிணறு பகுதியில் உள்ள ஆனைக்காரன் தெருவில் வந்துகொண்டிருந்த போது, இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரது வலது கையில் சிறியரக கத்தியால் வெட்டிவிட்டு அவரிடம் இருந்த பணப்பையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதனை தொடர்ந்து கையில் காயத்துடன் இருந்த அவரை அருகில் இருந்த பொதுமக்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதனை தொடர்ந்து ரஃபீக் கான் மூலம் தகவல் அறிந்த ஜாபர் அலி ஏழுக்கிணறு காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். இதனை தொடர்ந்து புகாரின் அடிப்படையில் வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா, பூக்கடை சகர உதவி ஆணையர் லட்சுமணன் மற்றும் ஏழுக்கிணறு குற்றப்பிரிவு ஆய்வாளர் தவமணி ஆகியோர் இந்த சம்பவம் குறித்தும் கொள்ளையடிக்கப்பட்ட சரியான தொகை எவ்வளவு என்பது குறித்தும் நடைபெற்று வரும் விசாரணை பற்றி ஆலோசனை மேற்கொண்டனர். மேலும், இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் மர்ம நபர்கள் யார் என்பது குறித்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய புகார்தாரர் நசீர் கான், இந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளதாகவும், கொடுத்தனுப்பப்பட்ட தொகை எவ்வளவு என்பது கணக்கு பார்த்தபின்தான் தெரியவரும் எனவும், குற்றவாளிகளை விரைவாக பிடிக்க காவல்துறையிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close