ராகுல்- சந்திரபாபு நாயுடு சந்திப்பை வரவேற்கிறேன்: மு.க.ஸ்டாலின்

  Newstm Desk   | Last Modified : 02 Nov, 2018 02:59 pm
m-k-stalin-tweet-about-rahul-naidu-meet

ராகுல் காந்தி மற்றும் சந்திரபாபு நாயுடு சந்திப்பை வரவேற்பதாக தமிழக எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். 

ஆந்திர பிரதேசத்தில் அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பா.ஜ.கவை வீழ்த்த காங்கிரஸ் உடன் கூட்டணி அமைப்போம் என அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று சந்தித்து பேசினார். 
 
அடுத்தாண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் மற்றும் சந்திரபாபு நாயுடு பா.ஜ.கவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றனர். 

 

— M.K.Stalin (@mkstalin) November 2, 2018

 

இதுகுறித்து தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்களை ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசியதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். பா.ஜ.கவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று ராகுல் சொன்ன கருத்து முக்கியமானது.

‘தேசத்தைப் பாதுகாக்க இது ஜனநாயக நிர்பந்தம்’ என்று சந்திரபாபு நாயுடு அவர்கள் சொன்னதை நான் வழிமொழிகிறேன்! மாநில சுயாட்சியைப் பறிக்கும் மத்திய பா.ஜ.க அரசை வீழ்த்த அனைத்து மாநிலக் கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும்!" என தெரிவித்துள்ளார்

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close