சென்னை - நூதன முறையில் கொள்ளையடித்து வந்த பெண் கைது

  டேவிட்   | Last Modified : 02 Nov, 2018 03:21 pm
women-arrested-in-koyambedu

சென்னை கோயம்பேடு பேருந்து நிறுத்தம் அருகே நூதன முறையில் பொதுமக்களிடம் கொள்ளை அடித்து வந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை கோயம்பேடு பேருந்து நிறுத்தம் அருகே பேருந்தில் பயணம் செய்யும் பொதுமக்களிடம் நாசூக்காகப் பேசி அவர்கள் எதிர்பாராத நேரத்தில் அவர்களது நகை மற்றும் பணத்தை பெண் ஒருவர் கொள்ளை அடிப்பதாக கோயம்பேடு காவல்துறையினரிடம் புகார்கள் குவிந்தன. 

இதனை தொடர்ந்து, சென்னை மதுரவாயல் உதவி ஆணையர் ஜான் சுந்தர் சம்பவ இடத்துக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்ததில் சந்தேகப்படும்படியான வகையில் பெண் ஒருவர் சுற்றியதை கண்டு உடனே அந்த பெண்ணை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில், அவர் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த லட்சுமி என்பதும் கோயம்பேடு பேருந்து நிறுத்ததில், கடந்த இரண்டு மாதங்களாக பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடம் நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்து வந்ததும் தெரியவந்தது. இதனை தொடந்து அந்த பெண்ணை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின் சிறையில் அடைத்தனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close