சென்னை - லஞ்சம் வாங்கிய 2 காவல் அதிகாரிகள் பணியிடை நீக்கம்

  டேவிட்   | Last Modified : 02 Nov, 2018 04:28 pm
2-police-officials-dismissed-by-a-k-viswanathan

சென்னை மத்திய குற்றப்பிரிவில் நில ஆவண மோசடி வழக்கு ஒன்றில் குற்றவாளிகளை கைது செய்யாமல் இருக்க லஞ்சம் வாங்கிய பெண் உதவி ஆய்வாளர் உட்பட 2 காவல்துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து சென்னை பெருநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். 

சென்னை பாடி அருகே உள்ள திரு.வி.க நகரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவருக்கு சொந்தமான நிலத்தை போலியான ஆவணங்கள் மூலம் அபகரித்ததாகக் கூறி மணிமேகலை, தீனதயாளன், கலைச்செல்வி ஆகிய மூன்று பேர் மீதும் மத்திய குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான இரண்டு பேரை கைது செய்யாமல் இருக்க மத்திய குற்றப்பிரிவில் உள்ள ஆவண மோசடி தடுப்பு பிரிவில் பணிபுரிந்து வந்த வழக்கு அதிகாரிகளான உதவி ஆய்வாளர் சந்தியா மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் சிவஞானம் ஆகிய இருவரும் 50 ஆயிரம் ரூபாய் வரை பேரம் பேசி லஞ்சம் பெற்ற ஆடியோ வெளியாகியுள்ளது.

அந்த பணத்தை அதிகாரிகள் இருவரும் பங்கு போட்டுக்கொண்டதாக தக்க ஆதாரங்களுடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் வரவே இதுகுறித்து இரண்டு அதிகாரிகளையும் நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்ட காவல் ஆணையர் விஸ்வநாதன், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் உதவி ஆய்வாளர் சந்தியா மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் சிவஞானம் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close